இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் தமிழ்த் தேசியத்தை பாதுகாப்பதற்காகவே தலைவர் தெரிவில் போட்டியிடுகிறேன் என தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், இருந்த போதிலும் தலைவர் தெரிவுக்கான வாக்களிப்பில் நான் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கே எனது வாக்கை அளிப்பேன் என தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் 90 வீதமான பொதுச்சபை உறுப்பினர்கள் தமிழ் தேசியத்துடன் பயணித்து சிறீதரனுக்கே ஆதரவளிப்பர். தமிழ் தேசியத்திற்கெதிராக கருத்து தெரிவிக்கும் சுமந்திரன் கட்சிக்கு தலைவராக வந்தால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் இருந்து தமிழ் தேசியம் இல்லாது போய்விடும் - என்றார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
No comments