யாழ்ப்பாணம் - கோண்டாவில் ஐயப்பன் ஆலயத்திற்கு அருகில், நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த வன்முறை கும்பல் ஒன்று இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட பின்னர் , வீதியில் நின்ற முச்சக்கர வண்டி ஒன்றினையும் அடித்து உடைத்து சேதமாக்கிய பின்னர் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு , வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் , யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்நிலையிலையே குறித்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments