யாழ்ப்பாண மாநகர சபையின் பவள விழா இந்த வருடம் கொண்டாடப்படுகின்ற நிலையில் ஆசி வேண்டி மதத் தலங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்று வரும் நிலையில், இன்றைய தினம் புதன்கிழமை பாசையூர் அந்தோனியார் ஆலயத்தில் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது
பாசையூர் அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை ஜரோ செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்ற விசேட திருப்பலியில் யாழ் மாநகர சபை ஆணையாளர், மாநகர சபையின் துறை சார் பொறுப்பதிகாரிகள் மாநகர சபை பணியாளர்கள் கலந்து கொண்டனர்,
அதனை தொடர்ந்து நாகவிகாரையிலும் மஸ்ஜித் முகமதியா பள்ளிவாசலிலும் விசேட . வழிபாடுகள் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments