Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இலங்கை, சிம்பாப்வே போட்டி கைவிடப்பட்டது


இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் சிம்பாப்வே அணி பதிலுக்கு துடுப்பாடி வந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Charith Asalanka 101 ஓட்டங்களையும், அணியின் தலைவர் Kusal Mendis 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் சிம்பாப்வே அணி சார்பில் Richard Ngarava, Blessing Muzarabani, Faraz Akram, ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்நிலையில் சிம்பாப்வே அணி பதிலுக்கு துடுப்பாடிய போது மழை குறுக்கிட்டதால் தற்போது போட்டி முழுமையாக கைவிடப்பட்டுள்ளது.

போட்டியில் மழை குறுக்கிடும் போதும் சிம்பாப்வே  அணி 4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 12 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது 


No comments