சிவத்தமிழ் செல்வியின் 99வது பிறந்த நாள் விழாவில் ஐந்து பெருந்தகைகள் சிவத்தமிழ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பேராசிரியர் சிவலிங்கராசா, வைத்திய கலாநிதி அருளானந்தம், இளைப்பாறிய விரிவுரையாளர் திருமதி நாச்சியார் செல்வநாயகம், நாதஸ்வர வித்துவான் இ.கேதீஸ்வரன் மற்றும் இளைப்பாறிய அதிபர் மு.அருணாசலம் ஆகிய ஐந்து பெருந்தகைகள்,விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சிவத்தமிழ் செல்வியின் 99வது பிறந்தநாள் அறக்கொடை விழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தெல்லிப்ழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரனும், சிறப்பு விருந்தினராக தெல்லிப்பழை பிரதேச செயலாளர் ச.சிவஶ்ரீ மற்றும்யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட வைத்திய கலாநிதி பாலகோபி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் விருதுகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து, தெல்லிப்பழை புற்று நோய் வைத்தியசாலைக்கு ரூபா 2 இலட்ச ரூபாய் வழங்கப்பட்டதுடன், உடுவில் கேட்ட கல்வி பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
No comments