யாழ்ப்பாணத்திற்கு 4 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலக சூழலில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு இருந்த நிலையிலும் , மாவட்ட செயலகத்திற்கு அருகில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது மூவர் கைது செய்யப்பட்ட போதிலும் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை குறித்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ்.நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது , ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என தடை கோரிய மனு நேற்றைய தினம் புதன்கிழமை மன்றினால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments