யாழ்ப்பாணம் நகரின் மத்திய பகுதியில் சிறிய ரக வாகனம் ஒன்று இன்றைய தினம் திங்கட்கிழமை தீக்கிரையாகியுள்ளது.
யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள வெற்று காணி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனமே தீக்கிரையாகியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதா அல்லது குழுவினரால் தீ வைக்கப்பட்டதா என்பது தொடர்பில் தெரிய வராத நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments