இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை காலை உடல் நலக்குறைவால் சாந்தன் காலமானாா்
இலங்கைக்கு இன்றைய தினம் புதன்கிழமை இரவு வரவிருந்த நிலையிலேயே சாந்தனின் உயிா் பிரிந்திருக்கின்றது.
சாந்தன் இலங்கை வருவதற்கான அனுமதியை இந்திய மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியது. அதன் பின்னா் சில ஆவணங்கள் தேவையாக இருந்ததால் அவரது பணயம் தாமதமாகியது.
இன்றிரவு புறப்பட தயாராக இருந்த நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதிதீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் அவா் மரணமானாா்.
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், திருச்சி சிறப்பு முகாமில் குடிவரவு சட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தாா்.
No comments