யாழ்ப்பாணத்திற்கு பிரபல பாடகர்கள் பலரும் வருவதற்கு ஆர்வமாகவே உள்ளனர் என பிரபல பாடகர் கரிகாரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இசை நிகழ்வின் ஆரம்பத்தியில் மேடையில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் நிகழ்ச்சி செய்வதற்கு ஏற்பாட்டாளர்கள் என்னை அணுகிய போது, நான் மறுப்பேதும் சொல்லாது உடனே நிகழ்வு செய்வதற்கு சம்மதம் தெரிவித்தேன்.
யாழ்ப்பாண மக்கள் இவ்வளவு அன்பு செலுத்துவார்கள் என்கிறார்கள் அதனை நான் நேரில் காண்கிறேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்தார்.
No comments