கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி நிகழ்வு இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
நேற்று கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.
இத்திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து 4000 வரையான பக்தர்களே வருகை தந்ததுடன் இந்திய பக்தர்கள் எவரும் பங்கேற்கவில்லை.
மேலும் இவ் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந் நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், இலங்கை கடற்படை தளபதி பிரியந்த பெரேரா, கடற்படை உயரதிகாரிகள், யாழிற்க்கான இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் , பொலிஸ் உயரதிகாரிகள் மதகுருமார்கள், பக்தர்கள்எனப் பலரும் பங்கேற்றனர்.
இத்திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டன.
No comments