பதுளையில் இருந்து அம்பாறைக்கு சென்ற இளைஞன் தனது காதலியுடன் விடுதியில் தங்குவதற்குப் பணம் இல்லாத காரணத்தினால் கடையொன்றில் 10,000 ரூபா பணத்தைத் திருடிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை பஸ் நிலையத்தில் இவரது காதலியை நிற்குமாறு கூறிவிட்டு அந்தப் பிரதேசத்தில் காணப்பட்ட பிரபல வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து குறித்த இளைஞன் பணத்தைத் திருடியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து பொலிஸார் குறித்த யுவதியின் பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் யுவதியை ஒப்படைத்துள்ளதுடன் இளைஞனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
No comments