யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் நிலையத்தின் அறையொன்றில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளை சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்ட விசாரணைகளில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார் எனவும், உயிரிழப்புக்கான காரணம் தெரியவரவில்லை. என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments