இலங்கையின் எரிபொருள் சந்தையின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில் மற்றுமொரு வெளிநாட்டு நிறுவனம் இலங்கை சந்தையில் பிரவேசித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் "யுனைடெட் பெட்ரோலியம்" என்ற நிறுவனமே இவ்வாறு இலங்கையில் கால் பதித்துள்ளது.
குறித்த நிறுவனத்துக்கும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகத்துக்கும் இடையே கடந்த 22ம் திகதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
நாட்டில் தற்போது இயங்கி வரும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அந்த நிறுவனத்திற்கு மாற்றப்படவுள்ளதுடன் மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அவர்களால் நிறுவப்பட உள்ளன.
அவர்கள் இலங்கையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக "United Petroleum Lanka Limited" என்ற நிறுவனத்தை பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments