Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பாக்குநீரிணையை நீந்தி கடக்கவுள்ள 13 வயது சிறுவன்


போதைப்பொருள் பாவனையை தவிர்த்தல் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கோரி பாக்கு நீரிணை நீந்திக் கடக்கப் போவதாக ஹரிகரன் தன்வந்த் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

திருகோணமலை இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் 13வயது மாணவன் ஹரிகரன் தன்வந்த் பாக்கு நீரிணை நீந்திக் கடந்து சாதனைப் பயணத்தினை மேற்கொள்ளவுள்ளார்.

மார்ச் மாதம் முதலாம் திகதி தனுஸ்கோடியில் இருந்து அதிகாலை 12.05 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பித்து காலை 10:30 மணிக்கு தலைமன்னாரை வந்தடைவதற்கு  உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மாணவன் நீந்திக் கடக்கும் தூரம் 31.5 Km என்பது குறிப்பிடத்தக்கது.

பசுமையான பூமி மற்றும் கடல் பொக்கிசங்களை பாதுகாத்தல் என்ற மையக்கருத்தோடு Trinco Aid நிறுவனம் இந்த பாக்கு நீரிணையை கடக்கும் முயற்சியை ஒழுங்கமைத்துள்ளது.


No comments