முல்லைத்தீவு - குமுழமுனை, தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வேட்டைக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.
தண்ணிமுறிப்பு பகுதியை சேர்ந்த 48 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
வேட்டைக்கு சென்ற போது நாட்டு துப்பாக்கியை இயக்க முயன்ற போது அது வெடித்ததில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments