கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்த முதியவர் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மாதகல் பகுதியை சேர்ந்தவரும் ,கனடாவில் வசித்து வந்தவருமான சோதிலிங்கம் கந்தசாமி (வயது 65) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கனடாவில் வசித்து வந்த நிலையில் அண்மையில் தனது சொந்த ஊரான மாதகல் பகுதிக்கு வந்து உறவினர் வீடொன்றில் தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றைய தினம் திங்கட்கிழமை மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
No comments