யாழ்ப்பாணத்தில் குளிர்களி (ஐஸ்கிறீம்) விற்பனை நிலையம் ஒன்றில் விற்கப்பட்ட குளிர்களியில் தவளை ஒன்று காணப்பட்ட சம்பவம் தொடர்பில் சுகாதார பரிசோதகர்களினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
செல்லவச்சந்நிதி முருகன் கோவில் , சூழலில் உள்ள குளிர்களி விற்பனை நிலையம் ஒன்றில் , நேற்றைய தினம் ஒருவர் குளிர்களி ஒன்றினை வாங்கிய வேளை அதனுள் தவளை ஒன்று காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதை, அடுத்து உத்தியோகஸ்தர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில் தற்போது அதிகளவான வெப்பமான கால நிலை நிலவுவதானல், சந்நிதி ஆலயத்திற்கு செல்வோர் குளிர்பானங்களை , அருகில் உள்ள உணவங்கள் மற்றும் , குளிர்களி விற்பனை நிலையங்களிலையே கொள்வனவு செய்து பருகி வருகின்றனர்.
அந்நிலையில் குறித்த உணவகங்கள் மற்றும் குளிர்களி விற்பனை நிலையங்களின் சுகாதாரம் மற்றும் நீரின் தூய்மை என்பவை தொடர்பில் சுகாதார பரிசோதகர்கள் கவனம் செலுத்தி , சோதனை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments