யாழ். போதனா வைத்தியசாலையில், விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று நோயாளி ஒருவர் , வைத்தியசாலையை விட்டு, அனுமதியின்றி வெளியேறிய நிலையில் வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் , தலையாழி பகுதியை சேர்ந்த பஞ்சலிங்கம் தினேஷ் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மூச்செடுக்க முடியாமல் ,சிரமமாக உள்ளதாக தெரிவித்து , வைத்தியசாலையில் அனுமதியாகி இருந்தார். அதனை அடுத்து அவரை விடுதியில் மறித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை வைத்தியசாலை விடுதியில் இருந்து அனுமதியின்றி வெளியேறியவர் , வைத்தியசாலை வளாகத்தை விட்டு , வெளியேறி சிறிது தூரம் சென்ற நிலையில் , வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
No comments