மாத்தறையில் இருந்து மட்டக்களப்பிற்கு விற்பனைக்காக கடத்தி கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியன வலம்புரி சங்கு ஒன்றுடன் பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்குடா தபால் கந்தோருக்கு அருகாமையில், நேற்றைய தினம் இரவு வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த விசேட அதிரடி படையினர், பௌத்த தேரர் உட்பட இருவர் வலம்புரிசங்கு ஒன்றை விற்பனைக்காக கடத்தி வந்ததை அவதானித்து, கைது செய்தனர்
கைதானவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட வலம்புரி சங்கின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments