சென்னை அரச மருத்துவமனையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடலை யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
பூதவுடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஆவணங்கள் அனைத்தும் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கா ஏயார் லைன்ஸ் மூலமே பூதவுடலை கொண்டு வர முடியும் என்பதால் , சென்னையில் இருந்து இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாகவே யாழ்ப்பாணம் கொண்டு வர முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இறுதி கிரியைகள் மற்றும் , அஞ்சலி நிகழ்வுகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.
No comments