யூனியன் வங்கியினால் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் தலைமைக் காரியாலயத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றது .
பெண்களில் முதலிடுவோம் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவோம் பெண்களின் பொருளாதாரத்தில் முதலிடுவோம் என்னும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற மற்றும் சுய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான ஆலோசணை வழிக்ட்டல்களும் துறை சார்ந்த வல்லுநர்களால் வழங்கப்பட்டது.
நிகழ்வில் பொருளாதாரத்தை ஈட்டும் பெண்கள் தமது வேலைச் சூழலையும் குடும்பச் சூழலையும் சுமூகமாக கொண்டு செல்லல் என்னும் தொனிப் பொருளில் யுன்டிபி நிறுவன அதிகாரி வைதேகி நரேந்திரன்.
வியாபார திட்டமிடல் முன்மொழிவுகளைத் தயாரித்தலும் வியாபாரக் கணக்குகளை பேணல் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மிதிலா கெளதமன்.
வங்கி கொடுக்கல் வாங்கலும் பெண்களும் என்ற தொனிப் பொருளில் யூனியன் வங்கியின் வடக்கு கிழக்கு பிராந்திய முகாமையாளர் க.நிஷாகரன் ஆகியோர் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கினர்.
அனுபவப் பகிர்வு வன்னி கஜு ஜெஸ்மின் ஜெயமலர் மற்றும் வேலைத் தளத்தில் ஏற்படும் பால் நிலை சார் பிணக்குகளைக் கையாளுதல் மன அழுத்தத்தங்களைக் கையாழுதல் எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி மாவட்ட செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் உதயனி நவரட்னம் மற்றும் சட்டத்தரணி கார்த்திகா ஆகியோர் வளர்வார்களாகக் கலந்து கொண்டனர்
No comments