Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பசில் ராஜபக்ஷவின் வருகை மிகவும் வரவேற்கத்தக்க விடயம்


பசில் ராஜபக்ஷவின் வருகை மிகவும் வரவேற்கத்தக்க  விடயம் என தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

நாதியற்ற நபராக இருந்தவர் வேறு யாரும் இல்லை இந்த பசில் ராஜபக்ஷ . அவரை வரவேற்பதற்காக இன்று அனைவரும் விமான நிலையம் சென்றுள்ளனர். 

தமது அரசாங்கம் தோல்வியுற்றதை அறிந்து , நாட்டை விட்டு ஓடியவர் இந்த பசில் ராஜபக்ச.

இவர்கள் வருகையால் எமது நாட்டுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. எமது நாட்டினை நாசமாக்கியவர்கள்.இதை நான் கூறவில்லை இந்த நாட்டில் உள்ள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் வேறு யாரும் இல்லை இந்த ராஜபக்ச குடும்பமே. பசில், மகிந்த, கோட்டபாய ராஜபக்ச, போன்றவர்கள் நீதிமன்றம் கூறியது .

பொருளாதார கொலையாளிகள் வேறு யாரும் இல்லை இந்த குடும்பமே. இவர் கடந்த காலங்களில் விளையாடிய விளையாட்டை எணியும் விளையாட முடியாது. இது பாசில் ராஜபக்ஷ அவர்களின் கடைசித் தேர்தல் ஆக இருக்கலாம்.

இது ராஜபக்சாகளின் இறுதித் தேர்தல் ஆக இருக்கலாம் ..

இது ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு இறுதி தேர்தல் மட்டுமல்ல சாவு மணியும் கூட.

இவர்கள் மக்கள் மத்தியில் சென்று எதிர்காலத்தில் மக்களால் விரட்டி அடிக்கப்படுவார்கள்.

எமது நாட்டை நாசமாக்கியவர்கள் எமது நாட்டை கடன் பொறுக்கிள் தள்ளியவர்கள்,  நாட்டில் இனவாதத்தை தோண்டியவர்கள்,  2019 ஆம் ஆண்டு தேர்தலின் போது எல்லா விதமான இனவாதத்தையும் தூண்டி, முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம்,  கிறிஸ்தவர்களுக்கு எதிரான இனவாதம், பல்வேறு வகையான சித்து விளையாட்டுகளை விளையாடி ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவர்கள்.   

இவர்களுக்கு மக்கள் இனிவரும் தேர்தலில் நல்ல பாடம் ஓட்டுவார்கள்.  இவர்கள் அரசியலில் இருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டியவர்கள்.  இவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதனை தேசிய மக்கள் சக்தி செய்யும் - என்றார்.

No comments