சாந்தனின் புகழுடலுக்கு அவரது தாயார் கிணற்று நீரை பருக்கி, விடை கொடுத்தார்.
சாந்தனின் இறுதி நேர ஆசையாக , தனது தாயின் கையால் ஒரு பிடி சாப்பிட வேண்டும் என்பதாக இருந்த நிலையில் கடந்த 28ஆம் திகதி உயிரிழந்தார்.
அதேவேளை 33 வருடங்களுக்கு மேலாக தனது பிள்ளையை காணாது , இருந்த தாய் பிள்ளை வீட்டுக்கு திரும்ப வரும் போது , பிள்ளைக்கு சத்தான உணவு வழங்க வேண்டும் ஆசையுடன் காத்திருந்தார்.
இருவரின் ஆசைகளும் நிராசையாக போன நிலையில் , சாந்தனின் இறுதி கிரியைகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை அவரது சகோதரியின் இல்லத்தில் இடம்பெற்றது.
தனது மகனுக்கு சோறு ஊட்ட காத்திருந்த தாய் , மகனின் புகழுடலுக்கு வாய்க்கரிசி போடவே முடிந்தது.
வீட்டில் இறுதி கிரியைகள் நிறைவு பெற்ற பின்னர் , சாந்தனின் பூர்விக வீட்டுக்கு , அவரது புகழுடல் கொண்டு செல்லப்பட்டு , அங்கு சில மணி நேரம் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
அதன் போது , பூர்விக வீட்டு கிணற்று தண்ணீரை சாந்தனின் புகழுடலுக்கு தாயார் பருக்கினார்.
அந்த நெகிழ்ச்சியான சம்பவம் அங்கிருந்த பலருக்கும் கண்களில் கண்ணீர் வர வைத்தது.
No comments