வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட துறையிலும் சாதித்த மாணவர்களுக்கு வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டது.
இலங்கை விமானப் படையின் 73 ஆண்டு நிறைவை வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணத்திலும் விசேட நிகழ்ச்சிகள் இன்று முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனொரு அங்கமாக வடக்கு மாகாணத்தில் கல்வி விளையாட்டு என பல்வேறுபட்ட துறையிலும் சாதித்த 20 மாணவர்களை உலங்கு வானூர்தியில் ஏற்றிச் சென்று யாழ்ப்பாணத்தை சுற்றி பார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் மாணவர்களை ஏற்றிய உலங்கு வானூர்தி யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளை சுற்றி வட்டமிட்டதுடன் மீண்டும் கல்லூரி மைதானத்தில் தரையிறங்கியது
No comments