மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மஹியங்கனை குகுலாபொல சோனுத்தர மகா விகாரையில் அமைந்துள்ள பொல்பெலகெடியே பஞ்ஞரதன விகாராதிபதியின் அறை மீதே துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
விகாராதிபதி நேற்றிரவு சமய நிகழ்வொன்றிற்கு சென்று திரும்பிய பின்னர் தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெஹியத்தகண்டிய குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சந்தேகநபர்களைக் தேடி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments