தம்புள்ளை - ஹபரணை பிரதான வீதியில் பெல்வெஹர பிரதேசத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை பஸ் ஒன்றும் காரும் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில், காரில் பயணித்த பிரான்ஸ் நாட்டு பிரஜைகளான குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் ஆண் குழந்தை, பேருந்தில் பயணித்த பெண் துறவி உள்ளிட்டோர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும், தம்புள்ளையில் இருந்து சீகிரியா நோக்கி பயணித்த வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற காருமே விபத்துக்குள்ளாகியுள்ளன.
பஸ் அதிவேகமாக பயணித்துள்ளதாகவும், மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிரே வந்த கார் மீது மோதியதாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments