பாடசாலை ஆசிரியை ஒருவரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு பாடசாலை ஆசிரியை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த 44 வயதுடைய ஆசிரியை பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது கால் மற்றும் கைகளில் வெட்டுக்காயங்கள் உள்ளது என பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் தெரிவித்தார்.
கத்தியால் வெட்டிய குற்றச்சாட்டில் 45 வயதுடைய ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் இருந்து கத்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விரு ஆசிரியைகளும் இரு பாடசாலைகளில் பணியாற்றும் நண்பிகள் எனவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்தேகநபர் அவரது வீட்டுக்குச் சென்று தாக்குதல் நடாத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments