Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Friday, May 16

Pages

Breaking News

போதைப்பொருட்களுடன் பொறியாளர் ஒருவர் கைது!


இத்தாலியில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஹேஷ் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தென் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது 1 கிலோ 238 கிராம் ஹேஷ் போதைப்பொருள், 90 கிராம் குஷ் போதைப்பொருள், 100,000 ரூபா பணம், 2 ஆப்பிள் ரக கையடக்கத் தொலைபேசிகள், ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

புலனாய்வுப் பிரிவினருக்கும் கிடைத்த தகவலுக்கு அமைய நுகேகொட விஜேராம சந்தியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த போதைப்பொருள் இத்தாலியில் இருந்து இந்த நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் மென்பொருள் பொறியியல் பட்டதாரி எனவும், அவுஸ்திரேலியாவில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்காக வேறு பாடப்பிரிவில் படித்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.