வீடொன்றினுள் கொள்ளையடித்து சென்ற கும்பல் ஒன்றை , பொலிஸ் சோதனை சாவடியில் பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அலவாகும்புர பிரதேசத்தில் உள்ள வீட்டினுள் நுழைந்த குழுவொன்று வீட்டில் இருந்த பெண்ணை அச்சுறுத்தி பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி சென்றது.
கொள்ளை கும்பல் வெள்ளை நிற வான் ஒன்றில் தப்பி சென்று கொண்டிருந்த வேளை , மஹியங்கனை பொலிஸ் வீதி சோதனை சாவடி வழியாக சந்தேகத்திற்கு இடமான முறையில் வாகனம் வந்ததை அவதானித்து பொலிஸார் வாகனத்தை மறித்து சோதனையிட்ட போது , வாகனத்தில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியதை அடுத்து , பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் , வாகனத்தில் இருப்பவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு தப்பி செல்கின்றனர் என்பதனை கண்டறிந்து அவர்களை கைது செய்துள்ளனர்.
No comments