கொழும்பில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களினால் மேதின சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும், கல்வி இராஜாங்க முன்னாள் அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் மேதின அழைப்பு சுவரொட்டிகள்ஒட்டப்பட்டுள்ளன.
மே மாத முதலாம் திகதி மாலை கொழும்பு மாளிகாவத்தையில் இடம்பெறவுள்ள மே தின கூட்டத்தில் நாட்டின் சகல பகுதிகளிலும் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் மே தின கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்தும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறித்த மே தின கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளதோடு, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பினையும் கூட்டத்தில் அறிவிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments