அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதி நேற்றைய தினம் புதன்கிழமை மாலை நபர் ஒருவருடன் ஹோட்டலுக்கு வந்து அங்குள்ள அறையில் தங்கியிருந்த நிலையில், சிறிது நேரத்தில் யுவதி மயங்கி விழுந்துள்ளதாக உடன் இருந்த நபர் ஹோட்டல் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளார்.
அதனை அடுத்து ஹோட்டல் நிர்வாகத்தால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments