Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

புத்தாண்டு பாடலை திரிவுபடுத்தி பாடிய குற்றத்தில் ஒருவர் கைது


சித்திரை புத்தாண்டு குறித்து சிங்கள மொழியில் பாடப்பட்ட பிரபல பாடல் ஒன்றை திரிபுபடுத்தி பாடிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரபல பாடகர் ரோஹன பெத்தகேவின் “சூர்ய மங்கல்ய” என்ற பாடலே இவ்வாறு திரிபுபடுத்தி பாடப்பட்டுள்ளது.

திரிபுபடுத்தப்பட்ட பாடல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் வடமேல் மாகாண கணனி குற்றப்பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் வாரியபொல தலாதுஓய பகுதியைச் சேர்ந்த 31 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நபர் மதுவரித் திணைக்களத்தில் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments