யாழ்ப்பாணம் அராலி கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை தீக்கிரையாகியுள்ளது.
அதனால் பெறுமதியான சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
வீடு திடீரென தீ பிடித்து எரிந்ததாகவும் , அதனை கட்டுப்படுத்த முயன்ற போதிலும் தீ வேகமாக பரவியதால் வீடு தீக்கிரையாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments