ஜுன் மாதம் 17 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலும், ஜனாதிபதி தேர்தலும் இவ் வருடம் நடுப்பகுதியில் நிச்சயமாக நடைபெறும்.
அரசியல் நெருக்கடி காரணமாக மகாணசபைத் தேர்தல் காணாமல் போயுள்ளமை என்பது தெளிவாக தெரிகிறது. அதேபோல ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் காலந்தாழ்த்த முடியாது.
ஜுன் மாதம் 17 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளது. அது வேறு யாருக்கும் அந்த அதிகாரம் இல்லை.
எனினும், நாடாளுமன்றம் தேர்தல் குறித்தான முழுமையான அதிகாரம் தற்போது ஜனாதிபதியிடம் உள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திற்குள் எந்த நேரத்திலும் நாடாளுமன்ற தேர்தலை நடத்த முடியும் என ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
No comments