சுற்றுச் சூழல் தொடர்பான ஜனாதிபதியின் சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் நேர்வேயின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிமான்ஸு கிளாடி ஆகியோர் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இதன்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், கிழக்கு மாகாணத்தில் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற சுற்றுச்சூழலை உருவாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
குறித்த சந்திப்பில் கிழக்கு மாகாண சுற்றுச்சூழல் சூழல் பாதுகாப்பு செயலாளர், திருகோணமலை,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள், நகரசபை செயலாளர்கள் மற்றும் அரச உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
No comments