கம்பஹா, ரத்துபஸ்வெல எனும் பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு பிரதேசவாசிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தி மூவருக்கு மரணத்தை ஏற்படுத்தியதுடன், 45 பேருக்கு கடும்கயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இருந்து இராணுவ மேஜர் ஒருவர் உட்பட 04 இராணுவத்தினரை கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.
2013 ஓகஸ்ட் முதலாம் திகதி, கம்பஹா வெலிவேரிய, ரத்துபஸ்வலவை மையமாகக் கொண்ட தனியார் வர்த்தகக் குழுவொன்றின் தொழிற்சாலையொன்றில் இருந்து வெளியேறும் கழிவுகளால் குடிநீரில் விஷம் கலந்துள்ளதாகக் கூறி, சுத்தமான நீரைக் கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டகாரர்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டதுடன் , 45 பேர் காயங்களுக்கு உள்ளானார்கள்.
அப்போது, மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும், கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் பதவி வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments