அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோர்சன் வனப்பகுதியிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
மோர்சன் தோட்டத்திலுள்ள சிலர் நேற்றைய தினம் தங்களின் வீட்டுக்கு விறகு சேகரிப்பதற்காக வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப்பிரதேசத்தில் அதிக துர்நாற்றம் வீசியதால் அதனை அவதானித்த ஒருவர் இறந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதை கண்டதோடு உடனடியாக அவ்விடத்திலிருந்து குடியிருப்பு அமைந்துள்ள பகுதிக்கு வந்து பிரதேச மக்களுக்கு அறிவித்துள்ளார். அதேவேளை அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்துக்கும் தகவல் வழங்கியுள்ளார்.
தகவல் அறிந்த பொலிஸ் அதிகாரிகள் வனப்பகுதிக்கு சென்று சடலத்தை மீட்டனர்.
சடலம் உருக்குலைந்து காணப்பட்டதால் இறந்தவர் யாரென அடையாளம் காண முடியாத நிலையில் நீதவான் விசாரணையில் பின்பு சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments