Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

போலி வைத்தியர்களை கைது செய்ய நடவடிக்கை


போலி சான்றிதழ்களை காட்டி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர், போலி வைத்திய நிலையங்களை நடத்தும் நபர்களை கைது செய்வதற்கு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வைத்தியர்களுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ இலச்சினையுடன் கூடிய ஸ்டிக்கரை வாகனங்களில் தவறாக பயன்படுத்துவோர் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர், நெடுஞ்சாலையில் போலி சான்றிதழ்களை வழங்குவது, இலவச மருந்துகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

No comments