கொழும்பு , தலங்கம பகுதியில் தனது மனைவியை நண்பனுடன் சேர்ந்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் கணவனும் , நண்பனும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலங்கம பகுதியை சேர்ந்த 31 வயதான பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கணவன் மனைவி இருவரும் அப்பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளனர். கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து , கணவன் , தனது மனைவியை நண்பனுடன் இணைந்து கூரிய ஆயுதங்கள் தாக்கி படுகொலை செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கொலை குற்றச்சாட்டில் இருவரையும் கைது செய்துள்ளனர்.
No comments