பொசன் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 125 பேருக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கண்புரை சிகிச்சையளிக்கப்பட்டது.
அலாக்கா மற்றும் ஆனந்தா பவுண்டேசனின் பங்களிப்புடன் 51 இராணுவ படைப்பிரிவின் உதவியுடன் கண் நோயாளர்களுக்கான சிகிச்சை வைத்திய கலாநிதி மலரவனின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
சிகிச்சையின் முன்னதாக யாழ்ப்பாண நாகவிகாரையின் விகாராதிபதி தலைமையில் பொசன் ஆராதனை நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதி, வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர், மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர்கள் தாதியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments