Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஊடகவியலாளர் சடலமாக மீட்பு


இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறுவர் நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகப் பணியாற்றிய இந்துனில் ஜயவர்தனவின் சடலம் நேற்றைய தினம் புதன்கிழமை மோதரை கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

அவரது சடலம் மோதர லெல்லமேயில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் இவர் இரண்டு நாட்களாக தனது வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவரின் மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை அறிய பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்துனில் ஜயவர்தன  இலங்கை தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் வெளி விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் அவர் இதற்கு முன்னர் லக்பிம பத்திரிகை மற்றும் ஸ்வர்ணவாஹினி போன்ற ஊடக நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

No comments