யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தவரை டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த நபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
குருணாகல் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வேளை யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில், நுணாவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வேளை , யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது.
அதில் குறித்த நபர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு யாழ்,போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
No comments