குடும்ப தகராறு தொடர்பாக முறைப்பாடு செய்வதற்காக பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற தம்பதியினர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் பணப்பையை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாதுவ குரே மாவத்தையில் வசிக்கும் கணவன், மனைவி இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யவதற்காக வாதுவ பொலிஸ் நிலையத்தின் முறைப்பாடுகள் பிரிவிற்கு சென்றுள்ளனர்.
இதன்போது, இவர்கள் இருவரும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் மேசையின் மேல் இருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் பணப்பையை திருடிச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்
No comments