Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சாவகச்சேரியில் இலவச சட்ட உதவி சேவை


யாழ்ப்பாணம் சாவகச்சேரி, கோயில்குடியிருப்பு பகுதியில் சட்ட உதவி ஆணைக்குழுவின் இலவச சட்ட உதவி சேவை இடம்பெறவுள்ளது. 

கோயில் குடியிருப்பு கிராம சேவையாளர் அலுவலகத்தில் , நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 09 மணி முதல் மதியம் 12 மணி வரையில் சேவை இடம்பெறவுள்ளது. 

அதன் போது, வீட்டு வன்முறை, பால்நிலை சார் வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ஆலோசனை, சட்ட வழிகாட்டல்கள் இடம்பெறும். 

இவ் சட்ட சேவையை பெற வருவோர், பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டை, சட்ட உதவி பெற்றுக்கொள்வதற்கு பொருத்தமான ஆவணங்களை கொண்டுவருமாறும், மேலதிக தகவல்கள் தேவைப்படுவோர், 0775547902 மற்றும் 0772658002 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

No comments