Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வீட்டார் ஆலயத்திற்கு சென்ற சமயம் - வீட்டில் திருடர்கள் கைவரிசை


மட்டக்களப்பு புன்னைச்சோலை பகுதியில் வீடு ஒன்றில் நேற்று இரவு பெருமளவு பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளன.

புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு பின்புறமாகவுள்ள வீடு ஒன்றிலேயே இந்த துணிகரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலய திருச்சடங்கு நடைபெற்றுவரும் நிலையில், குறித்த வீட்டிலிருந்தவர்கள் வீட்டை பூட்டி சாவியை வீட்டின் அருகில் மறைத்து வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

அதன்பின் ஆலயத்திற்கு சென்று வீட்டுக்கு வந்து பார்த்தபோது  படுக்கை அறையிலிருந்த அலுமாரி உடைக்கப்பட்டு, அதிலிருந்த 17 இலட்சத்து 50ஆயிரம் ரூபா பணமும், நான்கரை பவுண் தங்கமும் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த சீசீரிவி கமராவின் கார்ட் டிஸ்க்கும் களவாடிச் செல்லப்பட்டுள்ளது.

மதில் பகுதியால் பாய்ந்து வந்து, மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து, வீட்டிற்குள் புகுந்து இந்த கொள்ளை இடம்பெற்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கு சென்றுவரும் நேரம் கவனிக்கப்பட்டு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும்,

இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.





No comments