திருகோணமலை கிண்ணியா அல் அக்சா கல்லூரியில் 32 மாணவர்களும், ஆசிரியர் ஒருவரும் குளவி கொட்டுக்கு இலக்காகி கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பாடசாலையில் தொழில்நுட்ப பிரிவு கட்டடத்தில் காணப்பட்ட குளவி கூடு ஒன்று, பலத்த காற்றின் காரணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை கீழே விழுந்ததனால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிண்ணியா பொலிஸரர் தெரிவித்தனர்.
No comments