Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். அயடீன் கலந்த உப்பு விற்பனை - மூவருக்கு தண்டம்


யாழ்ப்பாணத்தில் அயடீன் அளவு குறைந்த உப்பினை விற்பனை செய்தவர் , விநியோகித்தவர் , உப்பு நிறுவன உரிமையாளர் ஆகிய மூவருக்கும் நீதிமன்றம் தலா 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. 

கோண்டாவில் பகுதியில் பலசரக்கு கடையொன்றில் ,கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினால் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

அதன் போது , அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உப்பில் சந்தேகம் அடைந்து , அவற்றினை மீட்டு , நீதிமன்ற அனுமதி பெற்று , அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி இருந்தனர். 

பகுப்பாய்வு திணைக்கள பரிசோதனை அறிக்கையில், நியம அளவை விட குறைந்த அளவு அயடீன் உப்பில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதனை அடுத்து கடை உரிமையாளர் , உப்பு விநியோகஸ்த்தர் மற்றும் புத்தளத்தை சேர்ந்த உப்பு நிறுவன உரிமையாளர் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கு விசாரணை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது , குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , புத்தளத்தில் அமைத்துள்ள உப்பு தொழிற்சாலையை பரிசோதிப்பதற்கு ஏதுவாக நிறுவனம் அமைந்துள்ள பிரதேச சுகாதார திணைக்களத்திற்கு அறிவித்தல் வழங்கி , அது தொடர்பிலான அறிக்கையை பெற்று எதிர்வரும் 10ஆம் மாதம் 1ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு கட்டளையிட்டு , அன்றைய தினத்திற்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது 

No comments