நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன காலமானார்.
முதுமை காரணமாக சுகயீனமுற்றிருந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
சிரேஸ்ட அரசியல்வாதியும் சமூக செயற்பாட்டாளருமான விக்ரமபாகு கருணாரத்ன தனது 81ஆவது வயதில் காலமானார்.
2010 ஜனாதிபதித் தேர்தலில் மேசைச் சின்னத்தில் விக்ரமபாகு கருணாரத்ன போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1943 மார்ச் 08ஆம் திகதி பிறந்த கேம்பிரிட்ஜ் கல்வியாளரான இவர், இலங்கை விஞ்ஞானியுமாவார்.
அவரது பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள் என்பதோடு. அவர் தனது இடைநிலைக் கல்விக்காக கொழும்பு ஆனந்தா கல்லூரிக்குச் செல்வதற்கு முன்னர் மத்துகம ஆனந்த சாஸ்த்ராலயாவில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார் . அதன்பின் அப்போதைய சிலோன் பல்கலைக் கழகத்திற்கு (University of Ceylon) தெரிவான அவர் அங்கிருந்து மின் பொறியியலில் சிறந்த பெறுபேற்றுடன் (first class honours)பட்டத்தைப் பெற்றார் . கொமன்வெல்த் உதவித்தொகை மூலம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கற்க வாய்ப்புப் பெற்ற அவர், 1970 இல் முனைவர் (Doctorate) பட்டத்தை பெற்றார். அதனைத் தொடர்ந்து மீண்டும் இலங்கை வந்த அவர் தனது கல்வி மற்றும் அரசியல், சமூக சேவை வாழ்க்கையைத் முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்கத்கது.
No comments