யாழ். சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்றன.
சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார கலந்து கொண்டு பரிசோதனை நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தார்.
இதன்போது வாகனங்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுதிகள் ஆகியன பரிசோதிக்கப்பட்டன.
No comments