நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பயணித்த வாகனம் கிளிநொச்சி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் கிளிநொச்சி 155ஆவது கட்டை பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை குறித்த விபத்து இடம்பெறுள்ளது.
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனமும் , மோட்டார் சைக்கிளிலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படாத நிலையில் , வாகனங்கள் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
No comments